ரணிலை பலப்படுத்துவதற்கே பொது வேட்பாளார் திட்டம் : தர்மலிங்கம் சுரேஸ் சுட்டிக்காட்டு
தென்பகுதியில் செயற்படும் சிங்கள கட்சிகள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை பலப்படுத்த முயற்சிக்கின்றன. இதற்காக ரணிலால் திட்டமிடப்பட்ட பொதுவேட்பாளர் நிலையை தமிழ் தலைமைகளும் பொது அமைப்புக்களும் நடைமுறைப்படுத்துகின்றன என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (09.06.2024) பொது வேட்பாளர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொது வேட்பாளருக்கு வாக்களிக்க போவதாக இருந்தால் 75 வருடமாக நிராகரித்துவந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டதாகும் அந்த யாப்பும் சர்வதேசத்தில் ஏற்றுக் கொண்டதாகிவிடும்.
ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பாக மிகத் தெளிவாக ஏற்கனவே என அறிவித்தோம்.
இலங்கை அரசின் தலைவர்களிடம் தமிழ் மக்கள் நம்பிக்கை இல்லை தமிழர்களை கொன்று குவித்த ஒவ்வொரு தலைவர்களும் தமிழ் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றி அடக்கி ஒடுக்கி வந்தார்கள்.
இப்போது நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் இது தொடர்பில் பெரியளவில் திருப்தி இல்லாத நிலை காணப்படுகின்றதுடன் இந்த தேர்தலை ஒரு பொருட்டாக கருத்தில் கொள்ளவில்லை.
இனப்படுகொலை
தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற இனழிப்பை நீண்டகாலமாக சர்வதேசத்திடம் கொண்டு சென்று மக்கள் போராடிவருகின்றனர்.
யுத்தம் மௌனித்த 2009 பின்னர் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்ததையடுத்து தமிழ் மக்கள் ஏகோபித்து ஒருமித்து வாக்குகளை கொள்ளையடித்துவிட்டு சர்வதேச அரங்கிலே இனப்படுகொலை செய்த இராணுவத்தினரையும் சிங்கள ஆட்சியாளர்களையும் தமிழ் மக்களுக்கு துரோகங்கள் செய்த அத்தனை கும்பல்களையும் பாதுகாத்ததே தவிர எந்த விதமான ஆக்க பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ் மக்களை குழப்புவதற்காக பொது வேட்பாளர் என்ற நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தை உடைத்த மிக முக்கியமானவர் தற்போதைய ஜனாதிபதி.
இந்தியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் தமது பூலோக அரசியல் ரீதியாக இருப்பை தக்கவைப்பதற்காக இந்த நாட்டின் தேவையாக ரணில் இருக்கின்றார்.
இதற்கு பொது வேட்பாளர் திட்டம் அதற்கு இந்தியா அமெரிக்க பின்னணில் இருக்கின்றது அதில் மாற்று கருத்து இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |