கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொது மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் இனி, பிரமுகர் முனையத்திலிருந்து பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி விடுத்துள்ளார்.
இனிமேல், விசேட வரப்பிரசாதம் பெற்ற உயரதிகாரிகள் மாத்திரமே குறித்த முனையத்தின் வழியாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்கள் உட்பட சாதாரண மக்கள் முனையத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விமானம் நிறுத்துமிடத்திற்கு சென்று விசேட விருந்தினர்கள் யாரையாவது வரவேற்க வேண்டுமானால், விமான நிலையத் தலைவர், துணைத் தலைவர் அல்லது மேலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 22 மணி நேரம் முன்
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam