யாழில் பொலிஸாரால் கிராம சேவையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்(Photos)
யாழில் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்களை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பெயர்களை வழங்கிய கிராம சேவையாளரின் பெயரை, சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு பொலிஸார் வழங்குவதாக கிராம அலுவலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
யாழ்.மாவட்ட
கிராம அலுவலர்களுக்கும் அமைச்சரும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு
குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு இடையிலான சந்திப்பின் போதே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
கிராம அலுவலர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் பெயர்களை கிராம சேவையாளர்கள் பொலிஸாருக்கு வழங்குகின்றனர்.
இவ்வாறு தகவல் வழங்கும் கிராம சேவையாளரின் பெயரை சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் பெயர்களை வழங்கிய சில மணித்தியாலங்களுக்குள் பொலிஸார் ஊடாக அறிந்துகொள்கிறார்கள்.
யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் தொடர்கிறது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் அதனுடன் தொடர்புடைய கிராம மட்டத்தில் இருக்கும் நபர்களின் பெயர் விபரங்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு வழங்குகிறோம்.
அமைச்சரின் கருத்து
தகவலை வழங்கிய பின்னர் சில மணித்தியாலங்களில் எந்த கிராம சேவையாளர் யாருடைய பெயரை கொடுத்தார் என்ற விவரம் சந்தேகநபர்களிடம் செல்கிறது.
குறித்த தகவல்களை கிராம சேவையாளர்கள் பொலிஸாருக்கு வழங்கும் போது அதனை பொலிஸார் சந்தேகநபர்களுக்கு இவர்தான் கூறினார் என தெரிவிக்கிறார்கள்.
இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களால் கிராம சேவையாளருக்கு அச்சுறுத்தல் விடும் நிலை உருவாகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தகவல் வழங்கும் கிராம சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் எனக்கு விவரங்களை அனுப்புங்கள் அல்லது உங்கள் பிரதேச செயலாளர் ஊடாக அரசாங்க அதிபருக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
