ரிஷி சுனக் தரப்பு மீது பகிரங்க குற்றச்சாட்டு: பதிலளிக்க மறுக்கும் கட்சி உறுப்பினர்கள்
உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும் வெற்றியைக் கண்டுள்ள பிரித்தானிய(UK) எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் துணைத்தலைவர் மீது சில குற்றச்சாட்டுகளை ஆளுங்கட்சியினர் முன்வைத்துள்ளனர்.
எனினும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலரே வரி ஏய்ப்பு விடயங்களை செய்துள்ளதான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பிரித்தானிய எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் துணைத்தலைவர் ஏஞ்சலா ரேய்னர் (Angela Rayner)தனது சொத்துக்கள் குறித்து தவறான தகவல்கள் கொடுத்ததாகவும், வீடு ஒன்றை விற்றபோது வரி செலுத்தவில்லை எனவும் ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
5.4 மில்லியன் பவுண்டுகள் மோசடி
எனினும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், வீடு விற்ற வகையில், 5.4 மில்லியன் பவுண்டுகள் மோசடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
டேவிட் ட்ரெடின்னிக், எலினோர் லைங், ஷைலேஷ் வாரா மற்றும் மரியா மில்லர் என்னும் நான்கு கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதே இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
எனினும் குறித்த நால்வரும் இது பதிலளிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |