நுவரெலியாவிலுள்ள 15 பாடசாலைகளுக்கு சங்கீத உபகரணங்கள் வழங்கி வைப்பு
நுவரெலியா கல்வி வலயத்தில் சங்கீத பாடத்தினை மேம்படுத்தும் நோக்கில் 15 பாடசாலைக்களுக்கு இசைக்கருவிகள், சுருதி பெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வானது, நேற்று (06) தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நுவரெலியா கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
அதில் 15 பாடசாலைகளுக்கு சங்கீத பாடத்தினை விருத்தி செய்வதற்காக சுருதி பெட்டிகள் உட்பட சங்கீத உபகரணங்கள் இதன்போது பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன் இங்கு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் வன்னி ஓப் நிறுவனத்தின் அனுசரனையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அந்நிறுவனத்தின் தலைவர் ரஞ்சன் சிவஞானம், அந்நிறுவனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி மாலதிவரன், சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கும்பேசன் சந்திரசேகரன், உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.