முழு அதிகாரமும் ரணிலிடம்! ஜனாதிபதியின் பிரதிநிதிகள் நியமனம் குறித்து வெளியான தகவல்
ஆளுநர்களின் நியமனம், பதவி நீக்கம் என்பன எம்முடன் தொடர்புடையவை அல்ல, அவை முழுமையாக ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு உட்பட்டவை என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆளுநர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவர்களாவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அது குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கான முழுமையான உரிமையும், அதிகாரமும் அவருக்கு மாத்திரமே காணப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வடமேல், கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறு ஆளுநர்கள் பதவி விலகிய பின்னர் அந்தப் பதவிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களே நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,



