இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் - வெளியான அறிவிப்பு
மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டிற்குள் நிச்சயமாக நடைபெறும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று(15.05.2026) ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு வடகிழக்கில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! சிவப்பு எச்சரிக்கையுடன் அவசர அறிவுறுத்தல்
இந்த ஆண்டுக்குள் அது நடைபெறும்
இருப்பினும், இந்த ஆண்டிற்குள் தேர்தல்கள் நடத்தப்படும் சரியான காலவரம்பை தன்னால் குறிப்பிட இயலவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

"மாகாண சபை தேர்தல்கள் நடைபெறும். அவை தாமதப்படுத்தப்படுகின்றன என்று யார் சொன்னது? நாங்கள் டித்வாவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மாகாண சபை தேர்தல்கள் இந்த ஆண்டுக்குள் நடைபெறும். கவலைப்பட வேண்டாம். எப்போது என்று என்னால் துல்லியமாகக் கூற முடியாது.
அது சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் கையாளப்படுகிறது. இந்த ஆண்டுக்குள் அது நடைபெறும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri