மாகாணசபைத் தேர்தல் நடந்தால் என்.பி.பி. அரசு தோல்வியடையும்: சஜித் அணி ஆரூடம்
இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி தோல்வியடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலை விடவும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. ஏனைய எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியும் அதிகரித்திருப்பதைக் காணமுடிகின்றது.

அடுத்து மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அந்தத் தேர்தலை அரசு நடத்துமா எனத் தெரியவில்லை. அவ்வாறு நடத்தப்பட்டால் அனைத்து மாகாண சபைகளையும் எதிரணிகளே கைப்பற்றும்.
மக்கள் ஆணை
அதேவேளை, இந்த அரசு ஐந்து வருடங்கள் பயணிக்க வேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஆனால், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது, மக்கள் ஆணைக்கு முரணாக அரசு செயற்பட்டால் போராட்டங்களில் ஈடுபட்டு, அரசின் ஆயுள் காலத்தைச் சுருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam