தமிழருக்கு அதிகாரத்தை வழங்குங்கள்! அரசாங்கத்தை வலியுறுத்தும் சஜித் அணி
மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தி தமிழருக்கு அதிகாரத்தை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பணியை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அரசுக்கு சவால்
இதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசு முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. மக்கள் பிரதிநிதிகளின் வேலையை அரச அதிகாரிகள் செய்ய முடியாது.

எனவே, மக்கள் பிரதிநிதித்துவம் அவசியம். உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கு அஞ்சியா மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசு பின்வாங்குகின்றது என்ற சந்தேகம் எழுகின்றது.
முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறு அரசுக்கு சவால் விடுகின்றோம். குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கிய ஒரு வாய்ப்புதான் மாகாண சபை முறைமையாகும்.

எனவே, வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து சபைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri