மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மாகாண சபை தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார்
விசேட கலந்துரையாடல்
எதிர்வரும் மாகாண சபை தேர்தலை எதிர்கொள்வதற்கான அரசியல் உத்திகள் மற்றும் கட்டமைப்பு ரீதியான வேலைத்திட்டங்கள் குறித்த மிக முக்கியமான விடயங்களை ஆலோசிப்பதற்காக இந்த விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தீர்மானமிக்க இந்தத் தேர்தல் செயன்முறையை வலுப்படுத்துவதற்கு, முன்னாள் மாகாணசபை பிரதிநிதிகள் பெற்றுள்ள அரசியல் அனுபவங்கள் போன்ற விடயங்களைக் கேட்டறியும் நோக்கில் சஜித் பிரேமதாச குறித்த கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவரது ஒருங்கிணைப்புச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.
அதனடிப்படையில், இந்த விசேட கலந்துரையாடலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan