மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு அச்சம் : ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டு
கூட்டுறவுத் தேர்தல்களில் தோல்வி ஏற்படுவதால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகின்றது
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சட்டம் இயற்றிக் கொடுப்பதற்கு நாடாளுமன்றம் தயாராகவே உள்ளது. பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்தலாம். ஆனால், கூட்டுறவுத்தேர்தல்களில் தோல்வி ஏற்படுவதால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகின்றது என்பதே உண்மை என குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ள நாமல்! அம்பலமாகியுள்ள ராஜபக்சர்களின் சித்து விளையாட்டுக்கள்.