பிரித்தானியாவில் தீவிரமடைந்துள்ள போராட்டம் : பொலிஸார் மீது குடியேற்ற எதிர்ப்பாளர்கள் தாக்குதல்
பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) பகுதியில் சிறார்களுக்கான கோடைகால முகாமில் 17 வயதுடைய சிறுவன் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்ததில் இருந்து நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பிரித்தானியாவில் குடியேற்ற எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் ரோதர்ஹாமில்(Rotherham) உள்ள ஹோட்டலில் ஒன்றுக்குள் புகுந்து நாற்காலிகளை பொலிஸார் மீது தூக்கி எறிந்து தாக்குதல் நடத்தியதுடன், ஹோட்டலின் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தெறிந்துள்ளனர்.
தீ வைக்க முயற்சி
இதன்போது, கிளர்ச்சியாளர் மரக்கட்டைகள் மற்றும் நாற்காலிகள் ஆகியவற்றை ஹாலிடே இன் ஹோட்டல்(Holiday Inn Hotel) மீதும், அந்த கட்டிடத்தின் முன் அணி வகுத்து நின்ற பொலிஸார் மீது தூக்கி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் ஹோட்டலுக்கும் தீ வைக்க முயற்சி செய்தனர், இதற்கிடையில் மிடில்ஸ்பரோ (Middlesbrough) பகுதியிலும் குடியேற்ற எதிர்ப்பாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்ததோடு, அவரை சக ஊழியர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதா தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 12 மணி நேரம் முன்
புடின் பயன்படுத்திய ரகசிய ஏவுகணை... 160 ரஷ்ய எண்ணெய், எரிசக்தி வசதிகளைத் தாக்கிய உக்ரைன் News Lankasri