அரசியல் தீர்வுக்காக யாழில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வுக்காக ஒன்றாக போராடுவோம் என்னும் தொனிப்பொருளில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு சம உரிமை இயக்கம் கவனஈர்ப்பு பேரணி ஒன்றில் ஈடுபட்டுள்ளது.
குறித்த பேரணியானது நேற்றைய தினம்(02.06.2026) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
பலர் பங்கேற்பு
யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் ஆரம்பமான பேரணி சத்திரச்சந்தியை சென்றடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக வேம்படி சந்தியை சென்று அங்கிருந்து தந்தை செல்வா கலையரங்கில் நிறைவடைந்தது.

இந்தப் பேரணியில் புதிய ஜனநாயக மார்க்ஸலனின் கட்சி, சம உரிமை இயக்கம், ஆகியன இணைந்திருந்த. இந்திரானந்த டீ சில்வா, புபுது ஜெயக்கொட, காணாமல் போனவர்களின் உறவினர்கள் எனபலர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்



ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan