பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து கதவடைப்பும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுப்பு (Video)
பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் கதவடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுள்ளது.
வவுனியா- பூந்தோட்டம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கதவடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் பிரச்சினை, எரிவாயு பிரச்சினை என்பவற்றை முன்னிறுத்தி இப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது, “கோட்டா, மகிந்த அரசே ஆட்சியை விட்டு உடன் வெளியேறு”, “சிங்களம் - தமிழ்- முஸ்லிம் -
மலையகம் கடந்து மக்களாய் போராடுவோம், போராடும் மக்களைச் சுட்டுக் கொல்லாதே” என
எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் எரிவாயு கொள்கலன், பாண், மாபெட்டி என்பவற்றையும்
ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து பூந்தோட்டம் பகுதியில் உள்ள
வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு இருந்ததுடன், ஆர்ப்பாட்டத்தில்
வர்த்தகர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.








