காலிமுகத்திடல் சேதங்களுக்கு போராட்டகாரர்களிடம் இழப்பீடு பெறப்படும்:பிரசன்ன ரணதுங்க
காலிமுகத்திடலில் போராட்டகாரர்கள் தங்கியிருந்த இடத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டை போராட்டகாரர்களிடம் பெற்றுக்கொள்ள உள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சேதங்கள் சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் ஊடாக அவர்களிடம் இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
காலிமுகத்திடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் சம்பந்தமாக முழுமையான மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குமாறும் அமைச்சர், அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு இழப்பீடுகளை அறவிடவில்லை என்றால்,பிற்காலத்தில் அமைச்சு இதே போன்ற சிக்கலை எதிர்நோக்க நேரிடும் எனவும் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
ரெட்டாவின் வங்கிக்கணக்கில் பல இலட்சம் ரூபாவை வைப்பிலிட்டவர் அடையாளம்
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri