போராட்டக்காரர்களே ரணிலை அரியணையில் ஏற்றினார்கள்: 'மொட்டு'க்குத் தொடர்பில்லை என்கிறார் பசில்
ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக்கியது போராட்டக்காரர்களே. அதனூடாகவே அவர் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்தார். போராட்டக்காரர்களின் கோரிக்கையைக் கோட்டாபய கச்சிதமாக நிறைவேற்றினார். இதற்கும் மொட்டுக் கட்சியினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கூறியதாவது,
"ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக்கியது மொட்டுக் கட்சியினர் அல்லர். போராட்டக்காரர்களே அவரைப் பிரதமராக்கினார்கள். அவர்கள்தான் மகிந்த பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும், எதிர்க்கட்சியிலிருந்து ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் கோரினார்கள்.
கோட்டாவுக்கு கடும் அழுத்தம்
நாங்கள் மகிழ்ந்தவே பிரதமராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்தோம். மகிழ்ந்தவை தவிர வேறு எவரையும் பிரதமராக நியமிப்பதற்கு நாங்கள் விருப்பமில்லை என்று உறுதியாகக் கூறினோம்.
ஆனால், கோட்டாபய அவரது விருப்பத்தின்படி ரணிலைப் பிரதமராக நியமித்தார். மஹிந்தவுக்கு மக்கள் ஆணை இல்லை. அவரைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்குங்கள் என்று கோட்டாவுக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.
ரணிலை ஜனாதிபதியாக்க முடிவு
அதனால்தான் அவர் ரணிலைப் பிரதமராக நியமித்தார். அவர் பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கும் பின்னர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமைக்கும் எங்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை.
பின்னர் நாடாளுமன்றின் ஊடாக ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை வந்தபோது அப்போதைய வேட்பாளர்களை ஆராய்ந்து பார்த்து ரணிலை ஜனாதிபதியாக்குவதற்கு நாம் முடிவெடுத்தோம்.
மாந்தவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியமை பிழை. அவர்தான் இப்போதும்
பிரதமராக இருந்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
