ட்ரம்ப்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. காசா விற்பனைக்கு அல்ல..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஸ்காட்லாந்து நாட்டில் டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்குள் புகுந்த சிலர், `காசா விற்பனைக்கு அல்ல' என்று பெயின்டால் புல்தரையில் பிரம்மாண்டமாக எழுதியுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமின்றி, மைதானம் முழுதும் குழுக்கள் தோண்டியும், வீடு மற்றும் சுவர்களில் கிறுக்கியும் சேதப்படுத்திய அந்த பாலஸ்தீனிய குழுவினர், `காசாவைக் கைப்பற்ற நினைத்தால், ட்ரம்ப்பின்(Donald Trump) சொத்துக்கள் சூறையாடப்படும்' என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எச்சரிக்கை
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி பாலஸ்தீனத்தின் மீதான சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
குறித்த தாக்குதலை தொடர்ந்து இருதரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்ததில் பல்லாயிரகணக்கானோர் பலியாகியுள்ளனர்.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் காசாவுக்கு திரும்பியுள்ளதுடன் பணயகைதிகளும் பரிமாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, காசாவை விலைக்கு வாங்கி மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அந்நகரத்தை மேற்கு நாடுகளுக்கான சுற்றுலா தளமாக மாற்ற ட்ரம்ப் நினைத்துள்ளதாக தகவல் வெளியானது.
தனது தொலைநோக்கு பார்வை குறித்த ஏஐ காணொளியொன்றையும் அவர் வெளியிட்டார்.
இந்தநிலையிலேயே ஸ்காட்லாந்து நாட்டில் ட்ரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 12 மணி நேரம் முன்

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்.. இவர்தான், போட்டோ இதோ Cineulagam
