போராட்டக்காரர்கள் மீது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டால் பதற்றம்
புதிய இணைப்பு
ரம்புக்கனை போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 8 பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு
ரம்புக்கனையில் நிலவிவரும் பதற்ற நிலையை கட்டுப்படுத்த களத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின்போது பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவத்தை பொலிஸ் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.
பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி முற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவோரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது
இரண்டாம் இணைப்பு
ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த 12 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் கேகாலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்
இந்த சம்பவம், ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்டமையை கண்டித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
ரம்புக்கனை தொடரூந்து கடவையை சுமார் 15 மணித்தியாலங்களாக போக்குவரத்துக்காக தடை செய்தமையை அடுத்தே போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.







அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
