மீண்டும் கொழும்புக்கு வரும் போராட்டக்காரர்கள்: புலனாய்வுப் பிரிவினர் அரசுக்கு வழங்கிய தகவல்
போராட்டக்காரர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் கொழும்புக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
30 ஆம் திகதி வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30 ஆம் திகதியே இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
அன்றைய தினம் கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டங்களை நடத்த போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் கொழும்புக்கு வந்த போராட்டக்காரர்களை கலைத்த பாதுகாப்பு தரப்பு
அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட சில வாரங்களுக்கு முன்னர் கூட போராட்டக்காரர்கள் கொழும்புக்கு வந்தனர். அப்போது பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தண்ணீர் தாரை தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்களை கலைத்தனர்.