சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி இன்று போராட்டம்!

Sri Lanka Police Mullaitivu Hospitals in Sri Lanka Sri Lanka Government Protest
By Independent Writer Dec 29, 2025 08:15 AM GMT
Report
புதிய இணைப்பு- 12.30 pm

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதிகோரி தற்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  

முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(29.12.2025) இந்த போராட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி இன்று போராட்டம்! | Protest Today Demanding Justice Death Girl Tinoja

இதன்போது, முல்லைத்தீவு மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்று, ஜனாதிபதி செயலகத்திற்கும் அதன் பிரதிகள் சுகாதார அமைச்சர், செயலாளர் நாயகம், சுகாதார பணிமனை , வடமாகாண ஆளுனர் அலுவலகம், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுமி உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வடமாகாண சுகாதார திணைக்களம் இது தொடர்பில் ஆறுபேர் கொண்ட குழு 12 மணிநேரம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.  அவர்களின் அறிக்கை வந்த பின்னர் தான் சரியான முடிவு சொல்ல முடியும் என்றும், தற்போது இரண்டு மருத்துவர்களை தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்துள்ளதாகவும்  முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் நளின் பிரேமதாஸா  போராட்டகாரர்களிடம் தெரிவித்துள்ளார்.


குறித்த போராட்டத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மேலதிக தகவல்- ஷான்

முதலாம் இணைப்பு

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின்போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றையதினம்(29) நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வடக்கிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்போகும் அநுர! தமிழ் தேசியத்துக்கு எதிராக பெருஞ் சதி

வடக்கிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்போகும் அநுர! தமிழ் தேசியத்துக்கு எதிராக பெருஞ் சதி

 போராட்டம்

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா (வயது 12) என்ற சிறுமி திடீர் சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி இன்று போராட்டம்! | Protest Today Demanding Justice Death Girl Tinoja

அதனை தொடர்ந்து கடந்த 21ஆம் திகதி சிகிச்சையின்போது உயிரிழந்தார். மருத்துவத் தவறு காரணமாகவே, இந்த இறப்புச் சம்பவித்தது என்று சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

பொய்களை கூறி நாகரீகமற்று செயற்பட வேண்டாம்! கஜேந்திரகுமாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த சிவிகே

பொய்களை கூறி நாகரீகமற்று செயற்பட வேண்டாம்! கஜேந்திரகுமாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த சிவிகே

கோரிக்கை

இவ்வாறான பின்னணியிலேயே, சிறுமியின் இறப்புக்கு நீதி கோரி, முல்லைத்தீவு மாவட்டவைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி இன்று போராட்டம்! | Protest Today Demanding Justice Death Girl Tinoja

இந்தப் போராட்டத்துக்கு வணிக நிறுவனங்கள், சங்கங்கள் எனப் பல தரப்புகளும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. அத்துடன், ஏனையோரின் ஆதரவையும் அந்தத் தரப்பினர் கோரியுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையின் செயற்பாட்டினை உறுதி செய்ய மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள்,சுகாதார பணியாளர்களுக்கும்,மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

மேலதிக தகவல்- ராகேஷ்

15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US