களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் தொடரும் பதற்றம் (Video)
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து எதிர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராகவும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராகவும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 167 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று சிறைச்சாலையில் இருந்து வௌியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam