எரிவாயு இல்லை என்று போராட்டம்! களத்தில் இறங்கிய பொலிஸார் (Video)
வத்தளை - நீர்கொழும்பு பிரதான வீதியில் எரிவாயு வழங்குமாறு கோரி பொதுமக்கள் வீதிக்கிறங்கி இன்று மாலை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் எரிவாயு வழங்கும் நிலையத்தில் இருந்து பொதுமக்களுக்கு எரிவாயு வழங்கும் பணியை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து குறித்த பகுதியில் பொதுமக்களுக்கு எரிவாயு வழங்கப்படுகின்றது, இதன் காரணமாக பொதுமக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
எனினும் இன்று மாலையுடன் எரிவாயு வழங்குவதை குறித்த நிலையம் நிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் எரிவாயு நிலையத்தில் இருந்து பொதுமக்களுக்கு எரிவாயு வழங்கும் பணியினை முன்னெடுத்துள்ளனர்.
அதன் பிறகு எரிவாயு பெற்றுக் கொண்டவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வெளியேறிச் சென்றமை எமது கமராக்களில் பதிவானது.



உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 21 மணி நேரம் முன்

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
