ராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம்
தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சராக அண்மையில் பதவியேற்ற பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்தகுமாரின் தலவாக்கலை லிந்துலை மெராயா பிரதேசத்தல் உள்ள வீட்டுக்கு எதிரில் இளைஞர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜாங்க அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி மலையக இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
வாழ்க்கை செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு, மின்சார துண்டிப்பு போன்ற பிரச்சினைகள் நாட்டில் நிலவும் போது, அரவிந்தகுமார், தனது பதவியை பற்றி மாத்திரம் சிந்தித்து, அரசங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக ராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் இதுவரை மலையகத்திற்கு எதனையும் செய்ததில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறியுள்ளனர்.
ராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு எதிரில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சில பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவல்களை அடுத்து, பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதுடன் ராஜாங்க அமைச்சரின் வீடடுக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.



