இணுவிலில் மதுபானசாலையை உடனடியாக அகற்றக் கோரி மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் - இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் போராட்டம் இன்று (20.08.2026) காலை இடம்பெற்றது.
இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டது.
போராட்டத்தில் கிராம மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு, மதுபானசாலை தமது கிராமச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்
குறிப்பாக, கிராமத்தில் மதுபான பாவனை அதிகரிப்பதை தடுப்பதுடன், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் குறித்த மதுபானசாலையை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.
மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் கிராமத்தின் சமூக சூழலை கருத்தில் கொண்டு, மதுபானசாலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு