யாழ்.பலாலி பகுதிகளில் உள்ள தங்களது பூர்வீகக் காணிகளை வழங்குமாறு கோரி மக்கள் போராட்டம்
எங்களை எங்களுடைய காணிக்குள் வாழத்தான் விடுகிறீர்கள் இல்லை. எம்மை கடைசி நேரத்தில் ஆவது சாக விடுங்கள் என வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள மயிலிட்டி மற்றும் பலாலி பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது பூர்வீகக் காணிகளை தங்களிடம் வழங்குமாறு கோரி மக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
போராட்டம்
36 ஆண்டுகளாக இடம் பெயர்ந்து நிர்க்கதியாக நிற்கும் நிலையில், தரைமட்டமாக்கப்பட்ட மயிலிட்டி காணிக்கு முன்பாகவும் அதாவது கமாண்டோ பங்களா அமைந்துள்ள பகுதியில் மாதா ஆலயம் முன்பாக காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாக அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணி எமக்கு கிடைக்கும் வரை தங்களது போராட்டம் பல வடிவங்களில் நடைபெறும் என்றும் தெரிவித்ததோடு இந்த அரசாங்கம் எங்களுக்கான வாழ்வுரிமையை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்திருக்கின்றனர்.





விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam