கோட்டா கோ கம முகவரிக்கு வந்த கடிதம்(Photos)
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் காலிமுகத் திடலில் அமைக்கப்பட்டுள்ள போராட்ட களத்திற்கு இலங்கை தபால் திணைக்களத்தின் ஊடாக கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அந்த கடித உறையில் முகவரியாக கோட்டா கோ, காலிமுகத் திடல் போராட்ட களம், கொழும்பு 1 என அச்சிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
கடிதத்தை தபால்காரர் ஒருவர் எடுத்துச் சென்று அங்குள்ளவர்களிடம் வழங்கியுள்ளார். கோட்டா கோ கம போராட்ட களத்தின் ஒருங்கிணைப்பு குழுவிற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத் திடலில் ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடத்தப்படும் இடத்திற்கு கோட்டா கோ கம என பெயரிட்டனர். அத்துடன் கூகுள் உலக வரைப்படத்திலும் சேர்த்தனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 54 நிமிடங்கள் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
