நாட்டில் நடப்பது குமார் குணரட்னம் பாணியிலான போராட்டமா

Sri Lankan protests Sri Lankan Peoples Galle Face Green Protest Sri Lankan political crisis
By Steephen Apr 27, 2022 10:04 AM GMT
Report

நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களின் போராட்டங்கள் முன்னிலை சோலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னத்தின் போராட்ட பாணியில் இருப்பதாக பலர் தெரிவித்து வருகின்றனர் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

குமார் குணரட்னம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார். அதில் தற்போது நாட்டில் நடைபெறும் பாணியிலான மக்கள் போராட்டங்கள் பற்றி தனது கருத்தை வெளியிட்டிருந்தாக அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சமவுடைமை முறையை தவிர மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை எனவும் நாட்டின் பிரஜைகள் தேர்தலில் வாக்களித்து விட்டு அடுத்த தேர்தல் வரும் காத்திருக்காது தமது உரிமைகளுக்காக நேரடியாக அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த அரசியலை அன்றாக வாழ்க்கையிலும் ஏனையவற்றை செய்வது போல், செய்ய வேண்டும். அரசியலை பிரஜைகள் தமது அன்றாக வாழ்க்கையின் ஒரு அங்கம் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் குமார் குணரட்னம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாட்டின் இளைய தலைமுறையினர், தமது உரிமைகளுக்காக காலிமுகத் திடலை அடிப்படையாக கொண்டு நாடு முழுவதும் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது.

இது குமார் குணரட்னத்தின் போராட்ட பாணிக்கு உரிமை கூறுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

குமார் குணரட்னம், ஒரு அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தனது இந்த கருத்தை சமூகமயப்படுத்தி இருந்தாலும் தற்போது காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டம் கட்சி சார்பற்ற போராட்டமாக அடையாளப்படுத்தப்படுகிறது.

நாட்டில் நடப்பது குமார் குணரட்னம் பாணியிலான போராட்டமா | Protest Kumar Gunaratnams Style Struggle

இளைஞர்களின் இந்த போராட்டத்திற்கு சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களின் ஆசியும் ஆதரவு கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் ஆதரவளித்து வருகின்றனர்.

நாட்டில் நடப்பது குமார் குணரட்னம் பாணியிலான போராட்டமா | Protest Kumar Gunaratnams Style Struggle

எது எப்படி இருந்த போதிலும் ரோஹன விஜேவீரவின் தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியில் குமார் குணரட்னம் 88 -89 ஆம் ஆண்டுகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். அவர் அந்த கட்சியின் ஆயுதப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தார் எனவும் கூறப்படுகிறது.

குமார் குணரட்னத்தின் சகோதரர் ரஞ்சிதம் குணரட்னம் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினராக இருந்து வந்ததுடன் 1989 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

88-89 மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியின் போது அதன் தலைவர் உட்பட பலர் கொல்லட்டனர். குமார் குணரட்னம் உட்பட சில தலைவர்கள் மாத்திரமே உயிர் தப்பினர்.

கேகாலையை பிறப்பிடமாக கொண்ட குமார் குணரட்னம் மற்றும் ரஞ்சித் குணரட்னம் ஆகியோர் போரதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள். குமார் குணரட்னத்தின் தந்தை யாழ்ப்பாணம் அளவெட்டியை சேர்ந்தவர் என்பதுடன் அவரது தாயார்  வி. ஆர். குணரத்தினம் கேகாலையில் பிறந்தவர் என்பதுடன்  கேகாலை புனித மரியாள் தமிழ்ப் பாடசாலையில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவராக இருக்கும் குமார் குணரட்னம், படைப்பாற்றல் மிக்க போராட்டகாரர் என்பதுடன் திறமையான ஒருங்கிணைப்பாளர் என்ற விடயத்திலும் பிரபலமானவர் என கூறப்படுகிறது.   

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US