வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் நாளை இல்லை
நாட்டின் நிலையை கருத்தில் கொண்டும், அன்னையரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும்,எமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது என்றும் புதிய திகதி அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்தபோது, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மைநிலையை அறியும் முகமாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த முற்பட்ட தாய்மார்கள், வயோதிபப் பெண்கள் மீது பொலிஸார் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர்.
எனவே அதனை கண்டித்து நீதி கிடைக்க வேண்டியும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் முற்றவெளியை நோக்கி செல்ல கண்டனப் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனாலும் நாட்டின் நிலையை கருத்தில் கொண்டும், எமது அன்னையரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், எமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது.
புதிய திகதி
அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தங்கள் ஒத்துழைப்பு தொடர வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri