யாழில் போராட்டம்: போராட்டக்காரர்களை காணொளி எடுத்தவாறு குழப்பத்தில் ஈடுபட்ட மூவர் (Photos)
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் மூவரே குழப்பத்தினை ஏற்படுத்தி இருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் மதியம் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, யாழ் .மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தேசியக் கொடி ஒன்றினை ஏந்தியவாறு வந்த மூவர் போராட்டத்தினை குழப்பும் முகமாகக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அதேவேளை குறித்த மூவரில் ஒருவர் போராட்டக்காரர்களைத் தனது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்தவாறே குழப்பத்தில் ஈடுபட்டு இருந்ததனை அவதானிக்க முடிந்தது.
அதனால் , போராட்டக்காரர்களுக்கும் அவர்களும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு,
குழப்பங்கள் ஏற்பட்டன.
போராட்டக்காரர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்ட மூவரும் பின்னர் பொலிஸாரினால்
அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.







