திருகோணமலையில் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்
நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும், அவற்றுக்கான விலைகளைக் குறைக்க வலியுறுத்தியும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது இன்று(11.05.2026) காலை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு : அடுத்த சில நாட்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் (TSDP) ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், கலந்துகொண்டவர்கள் பெற்றோல், எரிவாயு மற்றும் மின்கட்டண உயர்வைக் குறைக்குமாறு கோரி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் பொருட்களின் விலை உயர்வினால் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் வார்த்தைகளால் கூறமுடியாத துயரங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, நாளாந்த வருமானத்தை நம்பியிருக்கும் வறிய மக்கள் மூன்று வேளை உணவிற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய தரப்பினருடன் ஆலோசித்து மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, எரிபொருள் விலை உயர்வு காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் பின்தங்கிய கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், உப்பூறல், சீனன்வெளி, நல்லூர். பாட்டாளிபுரம், சூடைக்குடா, கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போதிய பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினாலும், எரிபொருள் விலையேற்றம் காரணமாகவும் தனியார் போக்குவரத்துகளை பயன்படுத்த முடியாமல் முடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இதனால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மகிந்த..! பின்னணியில் முக்கிய சத்தியக்கடதாசி - சட்டத்தரணிகளுடன் அவசர சந்திப்பு
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam