திருகோணமலையில் வியாபாரிகளால் போராட்டம் முன்னெடுப்பு
திருகோணமலை (Trincomalee) மத்திய சந்தை கட்டிடத் தொகுதி வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (19.06.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி திருகோணமலை நகரசபை வரை ஊர்வலமாக சென்றது.
மனு கையளிப்பு
இந்நிலையில், தங்கள் வியாபாரத்தை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு வீதி வியாபார நடவடிக்கைகளை தடை செய்ய கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்ட வியாபாரிகள் வலியுறுத்தினர்.

மேலும், திருகோணமலை நகர சபைக்கு மாத கட்டணம் செலுத்தி வருகிறோம் ஆனால் வீதியோர வியாபாரிகளை அனுமதித்து விற்பனை நடவடிக்கையை மேற்கொள்வதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது பதாகைகளை ஏந்தியும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்த சந்தை வியாபாரிகள் திருகோணமலை நகர சபை செயலாளரிடம் மனு ஒன்றினையும் கையளித்தனர்.

இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri