இலங்கையில் விசேட ஆய்வொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சீனா
சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக குழுவொன்று வெளிநாட்டு ஆய்வுப் பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் கடற்படைத் தலைமையகத்திற்குச் சென்ற இந்தக்குழுவினர், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்துள்ளனர்.
மேலும், 41 மாணவர் அதிகாரிகளை உள்ளடக்கிய சீன தூதுக்குழுவிற்கு ரியர் அட்மிரல் ஹகாங்(ஃ)பெங்( Hu Gangfeng) தலைமை தாங்குகிறார்.
மருத்துவக்கப்பல்
அதேவேளை, இந்தக்குழுவினர் இலங்கை கடற்படையினரின் பணிகள் உட்பட்ட விடயங்கள் தொடர்பாகவும், இருதரப்பு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ள நிலையில் தமது ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்கிடையில், மக்கள் சீன குடியரசு இராணுவத்தின் கடற்படையின் அமைதிப்பேழை எனப்படும் மருத்துவக்கப்பலும் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |