பொலிஸ் ஊரடங்கினையும் பொருட்படுத்தாது மலையகத்தில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (Photos)
கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் கண்டி பகுதியில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வந்த கோட்டா கோ கம அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் இன்று (09) தாக்குதலை மேற்கொண்டதனை தொடர்ந்து நாடெங்கிலும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கை பொலிஸ் ஊரடங்கினையும் பொருப்படுத்தாது இடம்பெற்றது.
இந்நிலை இந்த தாக்குதலை கண்டித்தும் அரசாங்கத்தினை வெளியேற கோரியும் மலையகத்திலும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதியில் குறித்த தாக்குதலை கண்டித்தும் அரசாங்கத்தினை வெளியேற கோரியும் பொலிஸ் ஊரடங்கினையும் பொருட்படுத்தாது கருப்புக்கொடி ஏந்தி கோட்டா கோ ஹோம் என்று கோசமிட்டவாறு ஹட்டன் மணிக்கூட்டு போபுரத்தின் அருகாமையில் ஆரம்பித்து மல்லியைப்பூ சந்தி வரை சென்று மீண்டும் திரும்பி நகரை நோக்கி வரும்வகையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நகரில் உள்ள வர்த்தகர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், மகிந்த ராஜபக்ச பதவி விலகியதனை தொடர்ந்து பொது மக்கள் பட்டாசு கொளுத்தி ஆராவாரம் செய்து மகிழ்ந்தனர்.





சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam