30 வருடங்களாக தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினை - தீர்வு கோரி நெடுந்தீவில் போராட்டம்
தீவகம் - நெடுந்தீவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சனை தொடர்பான கவனயீர்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது, இன்று(24.04.2026) மகாவலித்துறையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த பல தசாப்த காலமாக நெடுந்தீவில் காணப்படும் குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்த வருகின்றனர்.
மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான காணப்படும் நெடுந்தீவில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாக குறிப்பிட்டு வருகின்ற போதிலும் இதுவரையும் எவ்வித நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவில்லை.
குறிப்பாக தற்போது கடற்போக்குவரத்தில் ஈடுபடும் நெடுந்தாரகை படகில் நூறு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்லும் நிலை காணப்படுகிறது.
புறக்கணிக்கப்படும் மக்கள்
அதிலும் 80 பேர் அரச உத்தியோகத்தர்களாக இருப்பதனால் பொதுமக்கள் இருபது பேரை மாத்திரமே ஏற்றச் செல்லமுடிகிறது. இதனால் நேயமற்ற மற்றும் அவசர தேவை கொண்ட பொதுமக்கள் பயணிக்க முடியாது புறக்கணிக்கப்படும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது.

குறித்த போராட்டத்தில் பிள்ளைளைகளுக்கான கல்வி வேண்டும், சாறாப்பிட்டி நன்னீரை தாரை வார்க்காதே!, வரிசை யுகம் எப்போது முடியும், சுத்தமான குடிநீர் வேண்டும், நெடுந்தாரகைக்குள் வதைக்காதே மனிதர்களாய் நடத்து உள்ளிட்ட பல்வேறு கோசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கருப்பு துணிகளை கட்டியும் உழவு இயந்திரத்தில் கேலிச்சித்திரங்களை உருவாக்கும் வகையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கறுப்பு கொடிகளைத் தாங்கியவாறு மகாவலி இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரை மக்கள் பேரணியாக சென்று பிரதேச செயலரிடம் ஜனாதிபதி, ஆளுநர், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான மனுக்களை கையளித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செல்வராஜா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார். அவரிடமும் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.



வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam