கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்: இளங்குமரன் எம்.பி கவலை
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பாக நான் மிகுந்த கவலையுடன் என் நிலைப்பாட்டை வெளிப்படுத்த விரும்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
காணிகள் சுவீகரிப்பு
அந்த பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மக்களின் காணிகள், அவர்களின் வாழ்விடங்கள் மற்றும் தமிழர்களின் பன்மைத்துவ அடையாளங்கள் ஆகியவற்றை மதித்து, அவற்றின் சிவில் உரிமைகளின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் ஒரு நீதியுடைய தேசத்தை கட்டியெழுப்புவது எமது அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இந்த நோக்கத்தை முன்னிறுத்தி தேசிய ஒற்றுமையை உருவாக்கும் பணியில் நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றோம்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 2013ஆம் ஆண்டில் 38 ஏக்கர் காணிகளுக்கான சுவீகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, 2014 ஆம் ஆண்டில் காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ், கடந்த ஆட்சிக் காலங்களில் இராணுவ பொறியியல் படைத்துறையினருக்கு காணி அமைச்சின் ஊடாக அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.
இராணுவாத அரசியல் செய்யும் அநுர அரசு
ஆனால், இரண்டு நாட்களிற்கு முதல் நில அளவைத் திணைக்களம் எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி சுவீகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முயன்றபோது, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, உடனடியாக நான் தலையீடு செய்து, அந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு காணி அமைச்சிற்கு அறிவித்ததுடன், அவை உடனடியாக நிறுத்தியிருந்தேன் இத்தகைய உண்மையான நிலைமைகள் நிலவிக்கொண்டிருக்கையில், பச்சிலைப்பள்ளியில் சில குறுகிய சந்தர்ப்பவாத மற்றும் இனவாத நோக்கங்களைக் கொண்ட குழுக்கள் சமூக ஒற்றுமையை பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் இனவாத மற்றும் இராணுவாத அரசியலை முன்னெடுத்து எதிர்காலத்தில் அதிகாரத்தைப் பெறவும், அதனை தக்கவைத்துக் கொள்ளவும் முயலும் இத்தகைய அரசியல் செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கப்படுகின்றன.
குறிப்பாக, குறித்த பிரச்சினை தொடர்பில் மாவட்ட செயலகம் அல்லது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஆகிய என்னிடம் எந்தவிதமான நிர்வாக ரீதியான அணுகுமுறையுடனும் தீர்வு காண முன்வராது, பொதுமக்களை குறிப்பாக விளிம்பு நிலை மக்களை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்களை தூண்டுவது மிகுந்த கவலைக்குரிய ஒன்றாகும்.
தமிழ் தலைவர்களின் இன்னொரு பக்கம்
மேலும், கடந்த ஆட்சியாளர்களுடன் இணைந்து வடக்கு கிழக்கில் நடைபெற்ற நிர்வாக அரசியல் தலையீடுகள், அடக்குமுறைகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து தனிப்பட்ட சலுகைகளை அனுபவித்த அரசியல் முகவர்கள் இன்றைய தினத்தில் மக்களிடையே சந்தேகம், நம்பிக்கையின்மை மற்றும் ஒற்றுமையின்மையை உருவாக்க முயற்சிப்பது வருத்தமளிக்கிறது.
இவ்வாறான செயற்பாடுகள் இனவாத அரசியலை தூண்டும் அபாயகரமான முயற்சிகளாகும். எப்போதும் எமது நிலைப்பாடு தெளிவானது. மக்களின் உரிமைகளை பாதுகாப்பது, அவர்களின் பாரம்பரிய அடையாளங்களை உறுதிப்படுத்துவதோடு நீதியான சமூகத்தை உருவாக்குவது மற்றும் அனைத்து இனங்களும் மதங்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய சூழலை உருவாக்குவது என்பவை எமது பொறுப்பாகும்.
அதனால், பன்முக கலாசாரங்களை மதித்து, ஒவ்வொருவரின் சமூகத்தின் இருப்பையும் ஏற்றுக்கொண்டு, பரஸ்பர நம்பிக்கையுடன் வாழ்வதே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை வலியுறுத்துகிறேன்.
சமூக ஒற்றுமையை சிதைக்கும் இத்தகைய சந்தர்ப்பவாத மற்றும் இனவாத அரசியல் முயற்சிகளை மக்கள் தெளிவாக உணர்ந்து நிராகரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன், தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் எமது பயணத்தில் நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri