பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
எரிபொருள் போக்குவரத்து பவுசர்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
30 ஆயிரம் லீட்டர் எரிபொருளுடன் பவுசர் ஒன்றுக்கு தீ வைக்க முற்பட்ட நிலையிலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையிலேயே எரிபொருள் போக்குவரத்து பவுசர்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
