ரம்புக்கனை சம்பவம் - மைத்திரி கடும் கண்டனம் (PHOTO)
ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு முதல் தாம் ஜனாதிபதியாக இருந்த ஐந்து வருட காலப்பகுதியில் நிராயுதபாணிகளான எந்தவொரு பொதுமக்களுக்கும் தோட்டாக்களால் பதிலளிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி தனது குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளார்.
ரம்புக்கனையில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மைத்திரிபால சிறிசேனவும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.


பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
