ரம்புக்கனை விவகாரம் - ஐ.நா வதிவிட பிரதிநிதி கவலை
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிர் ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கையில் உள்ள ஐ.நா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்நிலையில், மக்களையும் அவர்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பது கட்டாயமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்ப்பாளர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து கவலையடடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தரப்பினரும் வன்முறையைப் பயன்படுத்துவது அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களைப் பாதுகாக்க குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் தங்கள் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை இதனூடாக பாதுகாக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
Deeply concerned by reports of harm to protestors in #Rambukkana. Violence by any party involved hinders the rights of all peaceful protestors. Restricting use of force to the minimum extent necessary is vital to protect citizens and their right to exercise fundamental freedoms.
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) April 19, 2022

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
