மாத்தறை நகரிலும் அமைதியின்மை - பொலிஸார் குவிப்பு (Video)
மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருடிக்கடி காரணமாக நேற்றைய தினம் எரிபொருள் விலை மீளவும் அதிகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றைய தினம் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
நாட்டில் பல இடங்களிலும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில், ரம்புக்கனை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், தற்போது மாத்தறையிலும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri