திருகோணமலை - மூதூரில் மதுபானசாலையின் அனுமதியை இரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திருகோணமலை(Trincomalee) - மூதூர் இருதயபுர பிரதேசத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்டுள்ள மதுபானசாலையின் அனுமதியை உடனடியாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது நேற்று(18.06.2024) மூதூர், மணிக்கூடுகோபுர சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு மூதூர் பிரதேச செயலகம் வரை நடைபாதை வழியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனு கையளிப்பு
இதன்போது, சர்வமத தலைவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், மற்றும் இருதயபுர பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இறுதியில் மூதூர் பிரதேச செயலாளருக்கு பொதுமக்கள் சார்பாக மதுபானசாலையை மூடும் படியான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
