நாட்டின் பல இடங்களில் விலையேற்றத்தை கண்டித்து போராட்டம் (Video)
நாட்டில் இன்று பல இடங்களில் பொருட்களின் விலையேற்றத்தினை கண்டித்து மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.
வவுனியா
பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் இன்று (24) இரவு 7 மணிக்கு குறித்த போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'பொருட்களின் விலைகளை குறை, அரசே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, பெற்றோலின் விலையை குறை, பாணின் விலையைக் குறை' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் அரசுக்கு எதிரான கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்களான ரசிக்கா பிரியதர்சினி, கருணாதாச உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
பூண்டுலோயா
வாழ்க்கை சுமை மற்றும் எரிபொருள் விலை, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூண்டுலோயா நகரில் இன்று (24) போராட்டம் நடைபெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் கபில பண்டார தலைமையில் நடைபெற்ற இப்போராட்டம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவாரணம் வழங்கவேண்டிய அரசாங்கம், மாறாக பொருட்களின் விலைகளை அதிகரித்து வருகின்றது. இதனை எம்மால் ஏற்கமுடியாது. ஆகவே, பொருட்கள், சேவைகளின் விலைகள் உடன் குறைக்கப்படவேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.
பூண்டுலோயா நகரில் உள்ள மைதானத்திற்கு முன்பாக போராட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டு நகரின் ஊடாக பூண்டுலோயா பஸ் தரிப்பிடம் வரை சென்று அங்கு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழ்பாணம்
நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த தீ பந்த போராட்டம் காங்கேசன்துறை வீதியின் ஊடாக சென்று சுன்னாகம் சந்தியில் நிறைவடைந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை தொகுதி அமைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த தீ பந்த போராட்டத்தில் விவசாயிகளும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். வலிகாம் தென்மேற்கு
யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் இன்று மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டு, தீப்பந்தம் ஏந்திப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். வலிகாம் தென்மேற்கு பிரதேச சபை அமர்வு இன்று தவிசாளர் அ.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது.
அமர்வின் இடைவேளையின்போது உறுப்பினர்கள் தீப்பந்தம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொருட்களின் விலை அதிகரிப்பினை கண்டித்தும், எரிவாயு தட்டுப்பாட்டிடனை தீர்க்ககோரியும், விசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு கோரியும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
பிரதேச சபை உறுப்பினர்கள் சபை முன்பாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது நாட்டில் விலைவாசி அதிகரிப்பினால் மக்கள் படும் துன்பங்கள், எரிவாயு வெடிப்பு, உணவு தட்டுப்பாடு என்பவற்றை குறிக்கும் முகமாக தீப்பந்தம் ஏந்தியும், விறகு கட்டுக்கள், பாண், மரவள்ளிக் கிழங்கு என்பவற்றினை ஏந்தியும் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் இறுதியில் மரவள்ளி கிழங்கு தீயில் போடப்பட்டது.
தொடர்ந்து தேனீர் இடைவேளையின்போது உறுப்பினர்களுக்கு மரவள்ளி கிழங்கும் பாணும் சம்பலும் வழங்கப்பட்டது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் இலங்கை சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இப்போராட்டத்தில் பங்கு கொள்ளவில்லை.

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
