தமிழர் பகுதியில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் குதித்த மக்கள் - அரசாங்கத்திடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை தொடர்ந்து, ஆவண நூல் வெளியீடும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான அனுஷ்டிக்கப்படும் இன்றைய நாளில் கிளிநொச்சி 155ஆம் கட்டை காளி கோயில் முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
தீச்சட்டியை ஏந்தியவாறு போராட்டம்
இதன்போது, இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கையளிக்கப்பட்ட மனுக்கள் உள்ளடங்கிய ஆவண நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தீச்சட்டிகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டக்களத்தில், ஓ எம் பி அலுவலகம் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், சர்வதேசமே நீதியை பெற்றுத்தா உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்டிருந்தன.
இந்த நிலையில், போராட்டத்தில் சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை! சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு
YOU MAY LIKE THIS VIDEO..
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14