கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
கிளிநொச்சி பூநகரி சின்னப் பல்லவராயன் கட்டு பகுதியில் களுத்தவறணை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துமாறு கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
குறித்த போராட்டமானது இன்று (29.07.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
இந்த பிரதேசத்தில் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் அதிகளவான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் ஏற்கனவே கிராமத்தில் போதைப்பொருள் பாவனையால் கூடுதலான பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பிரதேச அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் தமது பிரதேசத்தில் கள்ளுத்தவறணையை அமைப்பதற்கு எதிராகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து பிரதேச செயலாளருக்கான மனு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது கள்ளுத்தவறணை அமைப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதற்கான அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
