யாழில் சட்டவிரோதமாக இயங்கி வருவம் மதுபானசாலை: கண்டனம் வெளியிட்டுள்ள பொதுமக்கள்
யாழ்ப்பாணம் (Jaffna) - ஊர்காவற்றுறையில் மதுபானசாலை ஒன்றின் அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி ஊர்காவற்றுறை சிவில் சமூக அமைப்புக்களினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேராட்டமானது, இன்று (28.05.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மதுபானசாலை, பாடசாலைகள், ஆலயங்கள் தேவாலயங்கள், நீதிமன்றம் மற்றும் பொலிஸ் நிலையம் போன்ற பொது இடங்களுக்கு அண்மையில் சட்டவிரோதமாக இயங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கையளிக்கப்பட்ட மனு
இதன் காரணமாக, பல சமூகப் புரள்வான நடவடிக்கைகள் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் நடைபெற்று வருவதுடன் நீதிமன்ற வழக்குகளும் பதிவாகின்றன என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், தீவக மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்க கூடாது என தெரிவித்து இப் போராட்டத்தின் போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மதுபானசாலையை இரத்து செய்ய கோரி அப்பகுதி மக்களிடம் கையொப்பம் பெறப்பட்டுள்ளது.
அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்துக்குள் பதாகைகள் ஏந்தியயவாறு உள் நுழைந்து ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியிடம் மனு ஒன்றுடன் குறித்த கையொப்ப படிவத்தையும் கையளித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |