இராணுவ முகாமை அகற்ற வேண்டாம்! யாழில் தமிழர்கள் போராட்டம்(Video)
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை (14.08.2023) இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றது.
குறித்த பகுதியில் இடம்பெறும் மண் கடத்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த இராணுவத்தினரின் உதவி தேவை பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவ முகாமை அகற்ற வேண்டாம்
யாழ்.மாவட்ட கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
தற்போது இருக்கின்ற இராணுவ முகாம் அகற்றப்பட்டாலும் இதே பகுதியில் இருக்கும் அரச காணி ஒன்றில் இராணுவ முகாமை அமைத்து இந்த பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
