ஹட்டனில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் போராட்டம்(Photos)
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன், செனன் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் இன்று (23.06.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் 15 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
செனன் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் எனவும், பாடசாலையின் கல்வி பெறுபேறுகள் தற்போது சிறந்த மட்டத்தில் இருப்பதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள 15 ஆசிரியர்களில் அறுவர் ஆரம்ப பிரிவைச் சேர்ந்தவர்கள், ஏனையவர்கள் சாதாரண தரம் மற்றும் உயர் தரம் கற்பிக்கும் ஆசிரியர்கள். முக்கிய பரீட்சைகள் நெருங்கும் நிலையில் ஆசிரியர்களுக்கு இவ்வாறு திடீரென வழங்கப்பட்டுள்ள இடமாற்றமானது மாணவர்களின் கல்வியில் தாக்கம் செலுத்தும் எனவும் பெற்றோர்கள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் ஹட்டன் வலய கல்வி அலுவலக சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களின் பிரகாரமே ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது எனவும், இதற்கு பதிலாக விடயதானங்களுடன் தொடர்புபட்ட ஆசிரியர்கள் அப்பாடசாலைக்கு அனுப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
