இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சிங்களவர்கள் ஜெனிவாவில் முதன்முறையாகப் போராட்டம் (photos)
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும், அவசரகாலச் சட்டத்தை மீளப் பெறக் கோரியும் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை வளாகத்தில் புலம்பெயர் சிங்களவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
'அடக்குமுறையை நிறுத்து' என்ற தொனிப்பொருளில் இப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகத் தமிழ் மக்களே போராட்டம் நடத்துவது வழமை. அந்தக் காலப் பகுதிகளில் சிங்கள மக்கள், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அதன் மனித உரிமை மீறல்களை ஆதரித்தும் போராட்டம் நடத்தி வந்தனர்.
முதல் தடவையாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐரோப்பாவிலுள்ள புலம்பெயர் சிங்கள மக்கள் ஜெனிவாவில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் போராட்டச் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவதைக் கண்டித்தும், கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரியும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.
அத்துடன், ஊழல்வாதிகள் தற்போதும் அமைச்சரவையில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றும், ஊழல்வாதிகள் ஆளும் கட்சியில் இன்னமும் உள்ளார்கள் என்றும், அவர்கள் தண்டிக்கப்படாமையைக் கண்டித்தும் போராட்டக்காரர்கள் இதன்போது கோஷம் எழுப்பியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்
இந்தப் போராட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர் சிங்கள மக்கள் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக இத்தாலியிலிருந்தே அதிகளவானோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கும் நீதி வேண்டியும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
