கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலக பிரிவை சேர்ந்த மக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (04.08.2026) கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில், 2018ஆம் ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டமானது இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் தமது நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தில் ஓரளவு பூரணப்படுத்தி வாழ்ந்து வருகிறோம்.
வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
தற்போது டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பது இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனுள் தங்களை உள்வாங்கி தமது வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான மிகுதி பணத்தை வழங்க வேண்டுமென கோரியுள்ளனர்.
இந்த நிலையில் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.




