இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக கொழும்பில் போராட்டம்
தேசிய கிரிக்கெட் அணியின் தொடர்ச்சியான பின்னடைவுகள் மற்றும் மோசமான ஆட்டத்திறனை அடுத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) நிர்வாகத்தை பதவி விலகுமாறு கோரி அதன் தலைமையகத்திற்கு முன்னால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் இந்தப் போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி அன்று வீதியில் இறங்கிய பேராயர் இன்று எங்கே.. மொட்டுக் கட்சி பகிரங்க விமர்சனம்
ஷம்மி சில்வா பதவி விலக வேண்டும்..
இதன்போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் ஏனைய அதிகாரிகள் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

"வீட்டிற்குச் செல்லுங்கள்" (Go Home) என கோஷமிட்ட போராட்டக்காரர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அதிகாரிகள் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தினர்.
கிரிக்கெட் நிறுவன தலைமையகத்திற்கு அருகில் பலத்த பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்ற நிலையில், எந்தவித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை.