தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையிர் தாக்குதல்: சென்னையில் போராட்டம்!
அண்மையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை முற்றுகையிட முயன்ற தமிழர் ஆதரவுக் குழுவான மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்குள், தரங்கம்பாடி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தமிழக கடற்றொழிலாளர் மீதான வன்முறையை இலங்கை நிறுத்த வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை தூதரகத்தை முற்றுகை
இலங்கை அரசுடன் இந்திய இராணுவம் இணைந்து தமிழக கடற்றொழிலாளர் மீதான தாக்குதலை ஊக்குவிக்கிறது.
மேலும், இந்திய அரசு இதனை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பதைக் காட்டவே இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்திய அரசைக் கோருவதாகவும் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
எனினும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்கார்கள், சென்னையில் உள்ள
இலங்கை உயர்ஸ்தானிகரகத்தை நோக்கிச் செல்ல முற்பட்டபோது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 22 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri
